Header Ads

இந்தியாவின் தற்போதைய நிலை இலங்கைக்கு ஏற்படும்! சுகாதார அமைச்சின் எச்சரிக்கை


பொதுமக்கள் பொறுப்பற்ற முறையில் தொடர்ந்து செயல்பட்டு சுகாதார நடைமுறைகளை புறக்கணித்தால், நாட்டின் கொரோனா வைரஸ் நிலைமை இந்தியாவின் தற்போதைய நிலைமைக்கு ஒத்ததாக மாறக்கூடும் என்று சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந் நிலையில் நாட்டில் கொரோனா வைரஸ் நிலைமை மோசமடைவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக டாக்டர் ஹேமாந்த ஹெரத் தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கும் மக்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் பிற தடைகள் தொடர்பான முடிவுகளை அரசாங்கமும் அதிகாரிகளும் எடுத்து வருகின்றனர்.

எனவே கொவிட்-19 தொடர்பில் முன்வைக்கப்படும் ஆலோசனைகள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇


No comments

Powered by Blogger.