நாட்டில் மேலும் 2254 பேருக்கு கொரோனா நாட்டில் கொரோனா
தொற்றுக்குள்ளான மேலும் 2 ஆயிரத்து 254 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 63 ஆயிரத்து 496 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஆயிரத்து 612 பேர் குணமடைந்து தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 இலட்சத்து 28 ஆயிரத்து 607 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த நிலையில் நாட்டின் கொரோனா சிகிச்சை நிலையங்களில் 33 ஆயிரத்து 711 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
.
No comments