வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கான அரசாங்கத்தின் புதிய திட்டம்!
இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறந்த காப்புறுதி திட்டமொன்றை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியது.
தொழில் அமைச்சரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி மரணம் ஏற்படுமாயின் 6 இலட்சம் ரூபாவும், பூரண அங்கவீன நிலைமைக்கு உள்ளாகும்போது 4 இலட்சம் ரூபாவும் இழப்பீடாக வழங்க, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு தமது பணியிடங்களில் இடம்பெறும் தொழில்நுட்பம் மற்றும் வீடுகளில் இடம்பெறும் விபத்துகள், பல்வேறு நோய் நிலைமைகள் மற்றும் தொழில்தருணர்களால் ஏற்படும் தொந்தரவுகளால் ஏற்படும் மனநல மற்றும் சுகாதார பிரச்சினைகளுக்கு இந்த காப்புறுதி திட்டத்தின் கீழ் எவ்வித அனுகூலமும் வழங்கப்படமாட்டாது எனத் தொழில் அமைச்சரால் முன்வைக்கப்பட்ட யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments