இந்தியாவில் புயலில் சிக்கிய 90 பேர் மாயம்!
இந்தியாவின் பல பகுதிகளிலும் கடும் மழை பெய்து வருகிறது. இந்தியாவின், குஜராத் மாநிலத்தில் கரையைக் கடந்த ´டவ்க்தே´ எனும் புயல் மும்பையில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மும்பை கடற்பரப்பில் படகு ஒன்று மூழ்கியதில், அதிலிருந்த சுமார் 90 பேர் வரை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 26 இடங்களில் சுவர் இடிந்து விழுந்த விபத்துகளில், 8 பேர் காயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்தோடு, பலத்த காற்றின் காரணமாக மும்பை மெட்ரோபாலிடன் பகுதியில் 600 மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாக தெரிய வருகிறது.
மேலும், 40 ஆண்டுகள் கழித்து ஒரே நாளில் இவ்வளவு மழையை ஒரு புயல் ஏற்படுத்தியிருப்பது இதுவே முதன்முறையாகுமென அந்நாட்டு வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments