வைத்தியசாலையில் இடமில்லை! கொரோனாவுடன் சுற்றித்திரிந்த பெண்ணால் வெடித்தது சர்ச்சை
காய்ச்சல் மற்றும் சளி காரணமாக இந்த மாதம் 28 ஆம் திகதி அம்பியூலன்ஸ் மூலம் தம்பதெனிய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்க பெண்ணுக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ரத்தரன் ஹேன பகுதியில் வசிக்கும் பெண்ணுக்கே இவ்வாறு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குறித்த பெண்ணுக்கு 1ஆம் திகதி அறிவிக்கப்பட்டதுடன், மருத்துவமனையில் இடம் இல்லாததால் வீட்டில் தங்கும்படி கூறப்பட்டது.
பின்னர் அவர் தம்பதெனிய மருத்துவமனையில் இருந்து கிரியுல்ல பகுதிக்கு பேருந்தில் பயணம் செய்துள்ளார்.
மீண்டும் கிரியுல்ல பகுதியிலிருந்து மீரிகம விலவத்த பகுதிக்கு பஸ்ஸில் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும் விலவத்த பகுதியிலிருந்து யயத்தல்கொட வரை ரயிலில் பயணம் செய்து ரத்தரன் ஹேனவில் உள்ள அவரது வீட்டிற்கு வந்திருந்தார்.
பின்னர் அன்று மாலை இந்த பெண் தம்பதெனிய கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பப்பட்டதாக சுகாதார அதிகாரி கூறினார்.
குறித்த பெண் கொரோனாவுடன் பஸ் மற்றும் ரயிலில் பயணம் செய்துள்ளதால் இவரால் பலருக்கு கொரோனா பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த பெண்ணுடன் பஸ் மற்றும் ரயிலில் பயணித்தவர்கள் குறித்து தகவல் சேகரிக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments