Header Ads

வவுனியாவில் இருவேறு பகுதியில் பொலிஸார் என கூறி கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள்!

 

வவுனியாவின் இருவேறு பகுதிகளில் பொலிசார் என தெரிவித்து 30 பவுண் நகை கொள்ளையிடப்பட்டுள்ளது .

இன்றையதினம், வவுனியாநகர் மற்றும் தேக்கவத்தை பகுதிகளில் உள்ள வீடுகளிற்கு சென்ற இனம் தெரியாத நபர்கள் தங்களை பொலிசார் என கூறியுள்ளனர்.

பின்னர் வீட்டில் சோதனை செய்வது போல பாசாங்கு செய்துவிட்டு இரு வீடுகளில் இருந்தும் 30 பவுண் தங்க ஆபரணங்களை களவாடிக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இது தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.