Header Ads

திருமணத்திற்கு நாட்குறித்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள அவலம்!


திருமணத்திற்கு நாட்குறித்த நிலையில் திருமணம் செய்ய அனுமதிமதிக்குமாறு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு பலர் வருகை தருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக  எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் திருமணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருமண நாள் நிச்சியிக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த நாட்கள் தவறினால், அடுத்த திருமண நாட்கள் மாத கணக்கில் தள்ளி போகும் நிலை உருவாகியுள்ளதாகவும், எனவே மிக எளிமையாக இரு வீட்டாருடனாவது திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதிக்க வேண்டும் எனஉம் திருமணத்திற்கு நாட்குறித்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேவேளை சிலர் நீண்ட நாட்களாக திருமண நாட்கள் கூடாமல், திருமணம் கை கூடாமல் தோஷங்களால் பாதிக்கப்பட்டு இருந்து தற்போது நாள் குறித்துள்ள நிலையில் அந் நாளில் திருமணம் நடத்த முடியாவிட்டால் பின்னர் வருடங்கள் கடந்தும் திருமணம் கைகூடாது என ஜோதிடர்கள் கூறியுள்ளதாகவும், அதனால் மிக எளிமையாக, கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளுடனாவது திருமணத்தை நடத்த அனுமதிக்குமாறு கோரி வருகின்றனர்.

எனினும் நாடளாவிய ரீதியில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய திருமணம் உள்ளிட்ட எந்த நிகழ்வுக்கும் அனுமதி வழங்க முடியாது என சுகாதார வைத்திய அதிகாரிகள் அனுமதி வழங்க மறுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.