பாடசாலை மாணவிக்கு ஆசிரியரால் நேர்ந்த கதி
தன்னிடம் கல்வி கற்ற மாணவிக்கு ஆபாச வீடியோ காண்பித்து துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட பாடசாலை ஆசிரியரை காலி மேலதிக நீதிவான் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
50 வயதான பாடசாலை ஆசிரியரே விளக்கமறியலில் வைக்கப்பட்டார். சந்தேகநபர் அந்த பகுதியில் தனியார் வகுப்பை நடத்தி வருகிறார். அங்கு கல்வி கற்ற மாணவியே துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் வகுப்பில் யாருமில்லாத சமயத்தில் மாணவியை அழைத்து தனது கையடக்க தொலைபேசியில் ஆபாச படம் காண்பித்துள்ளார்.
பரீட்சை வினாத்தாள்களை முன்கூட்டியே வழங்குவதெனில் தனக்கு ஒத்துழைக்க வேண்டுமென குறிப்பிட்டு, ஆபாச படங்களில் காண்பிக்கப்படுவதை போல செயற்பட கூறி, தனது ஆடையை களைந்துள்ளார்.
மாணவி தப்பிச் செல்லும்போது, அவர் பலவந்தமாக பிடித்து துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் வெளியில் சொல்லக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார்.
பிறிதொரு நாள், மாணவியை சுவருடன் சாய்த்து, கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி, நடந்த சம்பவங்களை வெளியில் சொல்ல கூடாதென மிரட்டியுள்ளார். மாணவி சம்பவம் தாயார் பொலிஷ் நிலையத்தில் முறையிட்டதையடுத்து, ஆசிரியர் கைது செய்யப்பட்டார்
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments