கொழும்பு நகரை வட்டமிட்ட ட்ரோன் கமராக்கள்
கொழும்பு நகரின் வான் பகுதியில் இன்று முதல் கண்காணிப்பிற்காக ட்ரோன் கமராக்களை ஈடுபடுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.
கொழும்பு நகரில் ஏற்படுகின்ற வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். வாகன நெரிசல் அதிகமாக உள்ள பகுதியைக் கண்டறிந்து மாற்று நடவடிக்கையை எடுக்கவே பொலிஸார் இந்த முயற்சியை இன்று ஆரம்பித்திருக்கின்றனர்.
அந்த வகையில் இன்று வியாழக்கிழமை காலை, ஹைய் லெவல் வீதியில் பல இடங்களிலும் ட்ரோன் கமராக்கள் காட்சியளித்திருக்கின்றன. இந்த முயற்சிக்கு விசேட அதிரடிப்படையினரது உதவியும் வழங்கப்பட்டுள்ளது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments