ஜூனில் எம்.பி ஆகிறார் ரணில்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, அடுத்த மாதம் நடுப்பகுதியில் பாராளுமன்றத்துக்கு வருவதற்கு எதிர்பார்த்துள்ளதாக, கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று(19) கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு ஆசனம் கிடைத்த நிலையில், குறித்த ஒரு ஆசனத்துக்கான உறுப்பினரைத் தெரிவு செய்வதில், ஐக்கிய தேசிய கட்சிக்குள் இழுபறி நிலை ஒன்று காணப்பட்ட நிலையிலேயே, ரணில் விக்கிரமசிங்க இத்தீர்மானத்தை எடுத்துள்ளார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments