சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிப்பு? விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கை
சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிப்பதற்கான அனுமதியை வழங்காவிடில், நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் என லாப் கேஸ் நிறுவனத்தின் தலைவர் டபிள்யு.கே.எச். வெகபிட்டிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சமையல் எரிவாயு இறக்குமதிக்கு செலவாகும் தொகைக்கு இணையாக சமையல் எரிவாயு விநியோகத்துக்கான செலவு காணப்படுகிறது. இது பாரிய நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. ஆகையால், சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் அவற்றை இறக்குமதி செய்வதில் பெரும் நஷ்டத்துக்குள்ளாகியுள்ளனர்.
கேஸ் நிறுவனங்கள் நஷ்டமடையாமல் கொண்டு செல்வதாயின், 12.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் விலை 421 ரூபா அதிகரிக்கப்பட வேண்டும்.
அவ்வாறு நடைபெறாவிடின், நாட்டில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவும் நிலை ஏற்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments