Header Ads

இலங்கை நீதி அமைச்சு விடுத்த முக்கிய அறிவித்தல்!


நீதிமன்ற நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பான தீர்மானங்கள் நீதிச்சேவை ஆணைக்குழு ஊடாகவே பொது மக்களுக்கு அறிவிக்கப்படும். அவ்வாறு இல்லாமல் வேறு நபர்களால் விடுக்கப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் உத்தியோகபூர்வதானவை அல்ல என நீதி அமைச்சு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக நீதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொவிட் தொற்று நிலைமை காரணமாக நீதிமன்ற நிர்வாக நடவடிக்கை தொடர்பில் எடுக்கப்படும் ஏதாவது தீர்மானங்கள் நீதிச்சேவை ஆணைக்குழு அல்லது அந்த ஆணைக்குழுவின் அனுமதியுடன் நீதி அமைச்சினூடாக பொது மக்களுக்கு அறிவிக்கப்படும்.

அவ்வாறு இல்லாமல் கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக நீதிமன்ற நடவடிக்கை தொடர்பில் அல்லது நீதி அமைச்சின் கடமைகள் தொடர்பில் வேறு தரப்பினரால் தெரிவிக்கப்படும் அறிவிப்புகள் உத்தியோகபூர்வமான தல்ல.

அத்துடன் நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொவிட்19 தொற்று நிலைமயுடன் நீதிமன்ற நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பான தீர்மானங்கள் நீதிச்சேவை ஆணைக்குழுவின் www.jsc.gov.lk அல்லது உயர் நீதிமன்றத்தின் www.supremcourt.lk என்ற இணையத்தளத்தினூடாக தெரிந்துகொள்ளலாம்.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.