இலங்கை பயணிகளுக்கு தடை விதித்த மலேசியா
மலேசியா விரைவில் இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளப் பிரஜைகளுக்கு பயணத்தடை விதிக்கும் என மலேசியாவின் சிரேஷ்ட அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இத்தடை எப்போது முதல் நடைமுறைக்கு வரவுள்ளது என்பது குறித்த சரியான திகதி குறிப்பிடப்படவில்லை.
கொவிட்-19 வைரஸின் புதிய திரிபு மலேசியாவினுள் நுழைவதைத் தடுக்க இந்திய விமானங்களுக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்ட பின் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த நீண்டகால பாஸ் அனுமதியுள்ளோர்,
வணிகப் பயணிகள் மற்றும் குறுகிய கால வருகையாளர் என அனைத்து வகை பிரஜைகளுக் கும் இப்பயணத் தடை விதிக்கப்படவுள்ளது.
இதேவேளை இராஜதந்திர கடவுச்சீட்டு வைத்திருக்கும் அதிகாரிகளுக்கு இத்தடையிலிருந்து விலக்களிக்கப் படும் என மலேசிய அமைச்சர் இஸ்மாயில் சப்ரி மேலும் கூறினார்
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments