வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
கிழக்கு - மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கமானது “யாஸ்” (“YAAS”) என்ற ஒருசூறாவளியாக வலுவடைந்து இன்று அதிகாலை 05.30 மணிக்கு வட அகலாங்கு 16.3 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 89.7 E இற்கும் இடையில் மையம் கொண்டிருந்தது.
இந்நிலையில் அது மேலும் வலுவடைந்துமே 25 ஆம் திகதியளவில் ஒரு பாரிய சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், தொடர்ந்து வரும் 24 மணித்தியாலங்களில் ஒரு மிகப் பாரியசூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இத் தொகுதியானது வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மே 26 ஆம் திகதி மாலையளவில் மேற்கு வங்காள கரையை அடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
எனவே கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் நாட்டைச் சூழவுள்ள ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளிலும் வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் மறு அறிவித்தல் வரை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments