Header Ads

இலங்கையில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலைக்கு 606 பேர் பலி


இலங்கையில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையில் இதுவரை 606 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நேற்று வெளியிட்ட 32 பேரின் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையுடன் சேர்த்து இந்தப் புதிய எண்ணிக்கை வெளியாகியுள்ளது. நாட்டில் கொரோனா முதலாவது அலையில் 13 பேர் வரை உயிரிழந்தனர்.

இரண்டாவது அலை மற்றும் மூன்றாவது அலையில் இதுவரை 1210 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 567 பேர் 70 வயதைக் கடந்தவர்கள். 61 தொடக்கம் 70 வயதினிடையே 321 பேரும், 51 தொடக்கம் 60 வயதிடையே 171 பேரும் உள்ளனர்.

அத்துடன் 41 முதல் 50 வயதிடையே 87 பேரும், 31 முதல் 40 வயதிடையே 34 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதேவேளை, 10 வயது முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட 15 பேரும், 9 வயதுக்கு குறைவான இருவரும் கொரோனா தொற்றில் இதுவரை உயிரிழந்தவர்களின் பட்டியலில் உள்ளனர்

.🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.