நாட்டை முடக்குங்கள்; ஜனாதிபதிக்கு சென்ற கடிதம்
இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் 14 நாட்கள் நாட்டை முழுமையாக முடக்க வேண்டும் எனக் கோரி, ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஏற்கனவே நாட்டின் நான்கு முக்கிய மருத்துவ சங்கங்களும் 14 நாட்கள் முழுமையான முடக்கத்தை அல்லது ஊரடங்கு உத்தரவை விதிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ள நிலையில் இராஜாங்க அமைச்சரும் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
அத்தோடு 14 நாட்கள் முடக்கம் குறித்து ஆராய விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறும் என்றும் இருப்பினும் முடக்கம் தொடர்பாக இப்போது எதுவும் கூற முடியாது என்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் வைத்தியர் எஸ்.முணசிங்க தெரிவித்தார்.
இந்த நிலையில் , இரண்டு கல்வியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள், ஹொங்கொங் பல்கலைக்கழக மருத்துவ பீட நுண்ணுயிரியல் துறைத் தலைவர், உலக சுகாதார அமைப்பின் முன்னாள் மலேரியா நிபுணர் ஆகியோர் இலங்கையில் தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பாக ஆராய்ந்துள்ளனர்.
இதன்போது தனிமைப்படுத்தல், மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடை, குறுகிய மற்றும் இடைப்பட்ட முடக்க கட்டுப்பாடுகள், மனித நடமாட்டத்தை கட்டுப்படுத்துதல் ஆகியவை தொற்றை கட்டுப்படுத்த சிறந்த வழியில்லை என அவர்கள் எடுத்துரைத்துள்ளனர்.
அத்துடன் தனிமைப்படுத்தல் நடவடிக்கை போதுமானதாக இல்லை என்பதையும், மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகளிலிருந்து ஒரு சிறிய தாக்கம் மட்டுமே இருக்கும் என்பதையும் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ள்ன
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments