Header Ads

கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!


கொழும்பு வாழ் மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்ந்து ஏனைய பயணங்களை முற்றாக தவிர்க்குமாறு நகர மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

தொழில் நிமித்தம், அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மாத்திரம் வெளியில் செல்லுமாறும் அவர் கோரியுள்ளார். கொழும்பு நகர எல்லையில் அதிகமான கோவிட்தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதனால் நகர சபை எல்லையில் உள்ள அனைத்து பூங்காக்களும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே கொழும்பு நகரத்தின் வீடுகள், மாடி வீடுகளில் வசிக்கும் மக்கள், முடிந்தளவு இரண்டு வாரங்களுக்கு அருகில் உள்ள வீடுகளுக்கு செல்வதனையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் இரண்டு வாரங்கள் தீர்மானமிக்கதென்பதனால் மக்கள் அவற்றினை தவிர்க்க வேண்டும் எனவும் அத்தியாவசிய தேவைகளுக்காக வீடுகளிளில் இருந்து வெளியே செல்பவர்கள் முகக் கவசம் அணிந்து இடைவெளிகளை பின்பற்றுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு வாழ் மக்கள் எப்போது அருகில் இருப்பவர்கள் கோவிட் தொற்றாளர்கள் என எண்ணி உரிய சுகாதார வழிமுறைகளை பின்பற்றமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் பணிக்கு செல்பவர்கள் தங்கள் உணவை அடுத்தவர்களுடன் பகிராமல் தாங்கள் மாத்திரமே உட்கொள்ள வேண்டும் எனவும் நகர மேயர் ரோஸி சேனாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.