இலங்கையில் அடுத்த இரு வாரங்களில் கொரோனா உயிரிழப்பு உயரும்
நாட்டில் அடுத்த இரு வாரங்களில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை மற்றும் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன கூறியுள்ளார்.
மூன்றவாது அலை இலங்கையை மோசமாக பாதிக்கின்றது. பரவலின் அளவும் அதன் தீவிரதன்மையும்முன்னயை அலைகளை விட தீவிரமானவையாக காணப்படுகிறது.
பி117 வைரஸ் ஆரம்பத்தில் கென்டில் கண்டுபிடிக்கப்பட்டது. என தெரிவித்துள்ள அவர் அடுத்த வாரங்களில் நோயாளர்கள் எண்ணிக்கையும் உயிரிழப்பும் அதிகரிக்கும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் நிலைமையை சரிவர கையாள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம் என தெரிவித்துள்ள அவர் தொற்றுநோயினால் தீவிரகிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
No comments