பொதுமக்களிடம் அரச ஒளடத கூட்டுத்தாபனம் விடுத்துள்ள கோரிக்கை !
பொதுமக்கள் பணம் செலுத்தி போலியான கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டாம் என அரச ஒளடத கூட்டுத்தாபனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.
இதுவரை பணம் செலுத்தி தடுப்பூசி பெற்றுக் கொள்ளும் முறை நடைமுறையில் இல்லை. எனவே போலியான மருந்துகளை பெற்றுக் கொள்ள வேண்டாம் என கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தால் கொரோனா தடுப்பூசிகள் முற்றிலும் இலவசமாகவே ஏற்றப்படுவதுடன், எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
நாட்டில் கொரோனா தொற்று அதிகமாக பரவியுள்ள பகுதிகளை இனங்கண்டு மாவட்ட ரீதியாக தடுப்பூசிகள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
எனவே தடுப்பூசி குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments