Header Ads

சீனாவில் வசித்து வரும் இலங்கையின் இளவரசி: வெளியான பின்னணி தகவல் !


இலங்கையின் கோட்டை இராஜதானியை ஆட்சி செய்த ஆறாம் பராக்கிரமபாகு மன்னனின் 19 -வது பரம்பரையை சேர்ந்த இளவரசி சீனாவில் வசித்து வருவதாக தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

சீனா நடத்தி வரும் BRISL என்ற டுவிட்டர் பக்கத்திலேயே குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரச பரம்பரையை சேர்ந்தவர் என கருதப்படும் இந்த இளவரசி சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தில் கடந்த 26 ஆம் திகதி நடந்த வெசாக் பௌர்ணமி தின நிகழ்வில் கலந்துக்கொண்டதாகவும் குறித்த டுவிட்டர் பதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவுக்கான இலங்கை தூதுவர் பாலித கோஹேனவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் BRISL என்ற டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் குறித்த தகவல்கள் இலங்கையில் உருவாகிவரும் சீனாவின் துறைமுக நகர திட்டத்திற்கெதிராக சிங்கள மக்கள் குரல் எழுப்பி வருகின்ற நிலையில், அவர்களை திருப்திப்படுத்த, அமைதிப்படுத்த தாங்களும் நீங்களும் ஒன்றென காட்டிக்கொள்ள சீனா எடுத்துவரும் பல முயற்சிகளில் இதுவும் ஒன்றென அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.