பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அலி சப்ரி செய்த செயல்
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தனது தேர்தல் தொகுதி மக்களுக்கு பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட தினங்களின் போது பயணிக்க தனது கையொப்பமிட்ட அனுமதிபத்திரம் ஒன்றை வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுபோன்ற அனுமதிகளைப் பெற்ற நபர்கள் கடந்த தினங்களில் மாவட்ட எல்லைகளை கடந்து சென்றுள்ளதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனினும் அத்தியாவசிய சேவைகளுக்காகவே அவர் இவ்வாறு அனுமதிகள் வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் சந்தர்ப்பங்களில் அத்தியாவசிய சேவைகளுக்கான பயண அனுமதி வழங்கும் அனுமதி, மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
அலி சப்ரி, ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் இல் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்ததோடு மற்றும் சமீபத்தில் கொழும்பு துறைமுக நகர (Colombo Port City) வாக்களிப்பின் போது அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்ததும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments