மக்களின் நிலைமை கேள்விக் குறி
மக்கள் மீது கரிசனை இருந்தால், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை, அமைச்சரவை ஏற்க வேண்டுமெனத் தெரிவித்துள்ள முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, நாடும் மக்களின் சுகாதார நிலைமைகளும் கேள்விகுறியாகி உள்ளன என்றார்.
கொரோனா வைரஸ் தொற்று, நாட்டின் சகல பாகங்களுக்கும் வியாபித்துவிட்டது. தடுப்பூசி, ஒட்சிசன், வென்டலேட்டர், வைத்தியசாலைகளில் கட்டில்கள் என அனைத்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதேவேளை, தொற்றாளர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது எனக் குற்றஞ்சாட்டினார்.
சுகாதாரத் தரப்பினரின் ஆலோசனைகளுக்கு அமைவாகத் தீர்மானமொன்றை எடுக்கும் நிலைக்கு, நாடு தள்ளப்பட்டுள்ளது. ஜூன், ஜூலை மாதங்களில் உயிரிழப்புகளின் வீதம் பன்மடங்காக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக, அமெரிக்க பல்கலைக்கழகமொன்று மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், எனவே அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
இது, அரசாங்கத்தின் பெயரைப் பாதுகாக்கும் அல்லது கட்சிகளுக்கு இடையிலான போராட்டம் அல்லவெனத் தெரிவித்த அவர், நாட்டுமக்களின் உயிரைப் பாதுகாக்கும் போராட்டம் என்றார்.
அரசாங்கத்தை மாற்றுமாறு நாம் கோரவில்லை. அரசியலமைப்பின்படி நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பு, அமைச்சரவைக்கே உண்டு. நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கான முழுப் பொறுப்பையும் அமைச்சரவை ஏற்க வேண்டும்.
கொவிட்-19ஐ கட்டுப்படுத்துவதற்கான செயலணி செயலிழந்துள்ளது. நாட்டு மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். ஜனாதிபதியும் அமைச்சரவையும் இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான பொறுப்பை, அமைச்சரவையிடம் வழங்குமாறே கோருகின்றோம். இவ்விடயம் தொடர்பில், இந்தவாரமே எதிர்க்கட்சித் தலைவருடன் கலந்துரையாடி, அவர்களது ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ளவும் என்றும் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்தார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments