விநியோகங்கள் தடைப்படாதிருப்பதற்கு விசேட பொறிமுறை
கொரோனா தொற்றின் காரணமாக முடக்கப்படும் சந்தர்ப்பங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில், விசேட பொறிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் செயலாளரின் கையெழுத்துடன் ஆலோசனை வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
செயலணியின் தலைவரான பசில் ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (10) கூடிய போதே, கீழ்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டன.
- சேவை விநியோகம்
நீர், மின்சாரம், சமையல் எரிவாயு, எரிபொருள், தனியார் சுகாதார சேவை, தொலைத்தொடர்பு, கழிவு முகாமைத்துவம், அவசர அனர்த்த நிலைமைகள் முன்னெடுக்கப்படும்.
2. பொருள்கள் விநியோகம்
நுகர்வோருக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும் வீடுகளுக்கு விநியோகிப்பதற்காகத் திட்டமிட்டுள்ள சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், விநியோக வலையமைப்பு, விநியோகஸ்தர்களுடன் இணைந்து அடிப்படை கலந்துரையாடல்களை விரைவில் முன்னெடுக்க வேண்டும்.
சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக, நடமாடும் வர்த்தகர்களுக்காகக் குறைந்தளவு அனுமதியை வழங்குதல். இதன்போது பிரதேச செயலகப் பிரிவுகளில், மாவட்டங்களுக்குள் அல்லது மாவட்டங்களுக்கு வெளியே உணவுப் பொருள்களை விநியோகிப்பதற்குத் தேவையான அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கப்பட வேண்டும்.
3. தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தல் அல்லது முடக்கப்பட்டால் பொருள்கள், சேவைகள் விநியோகத்தில் ஈடுபடும் தனியார், நிறுவனங்கள், விநியோகத்தர்களுக்கு வர்த்தக அனுமதிப்பத்திரத்தை மக்கள் ஒன்று கூடாத வகையில் விநியோகித்தல் வேண்டும்.
4. அரச வங்கிகள், சதொச, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள், பொருளாதார மத்திய நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் எப்போதும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி, காற்றோட்டமாகத் திறந்துவைக்க நடவடிக்கை எடுத்தல்.
5.6. கிராமிய மட்டங்களில் பொருள்கள், சேவைகள் விநியோகப் பொறிமுறையைக் கண்காணிப்பதற்காக அதிகாரிகளை நியமித்து, அது குறித்து பிரதேச மக்களைத் தௌிவுபடுத்தி, அதைப் பின்தொடர்வது அவசியமாகும் என அந்த ஆலோசனை வழிகாட்டலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments