வாட்ஸ்அப் பிரைவசி பாலிசி - ஒப்புக் கொள்ளாதவர்கள் நிலை என்ன?
புது பிரைவசி பாலிசி விவகாரத்தில் பெரும் சர்ச்சையை வாட்ஸ்அப் எதிர்கொண்டது. பிரைவசி பாலிசி மாற்றத்திற்கு பயனர்கள் மே 15 ஆம் தேதிக்குள் ஒப்புதல் அளிக்க வாட்ஸ்அப் காலக்கெடு விதித்து இருந்தது. இந்த நிலையில், பிரைவசி பாலிக்கு ஒப்புதல் அளிக்கவில்லை எனில் வாட்ஸ்அப் அக்கவுண்ட்கள் அழிக்கப்படாது என வாட்ஸ்அப் தெரிவித்து உள்ளது
மே 15 ஆம் தேதிக்கு பின்பும் பிரைவசி பாலிசி அப்டேட் செய்யாதவர்கள் அக்கவுண்ட் அழிக்கப்படாது என வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறார். எனினும், புது அப்டேட் செய்யக் கோரி பயனர்களுக்கு தொடர்ந்து நினைவூட்டுவோம் என வாட்ஸ்அப் தெரிவித்து இருக்கிறது
பெரும்பாலான பயனர்கள் புது மாற்றத்தை ஏற்றுக் கொள்வதாக உறுதிப்படுத்தி இருக்கின்றனர் என வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். முன்பு புது மாற்றத்திற்கு ஒப்புக் கொள்ளாத பட்சத்தில் அக்கவுண்ட்களை அழிப்பதாக கூறிய நிலையில், தற்போது வாட்ஸ்அப் தனது முடிவை மாற்றிக் கொண்டது ஏன் என இதுவரை அறிவிக்கவில்லை.
புது அப்டேட் செய்வோரின் தகவல்கள் பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை ஒருபோதும் ஏற்படுத்தாது என வாட்ஸ்அப் அதன் பயனர்களிடம் தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இதுதவிர புது அப்டேட் செய்வதற்கான காலக்கெடுவை பிப்ரவரியில் இருந்து மே 15 ஆக அதிகப்படுத்தியது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments