Header Ads

கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உடல்களை இலவசமாக தகனம் செய்ய நடவடிக்கை

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் உடல்களை இலவசமாக தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூட்சி அமைச்சர் ஜானக பன்டார தென்னகோன் தெரிவித்தார்.

இது தொடர்பான மாவட்ட ரீதியான சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று இன்று கொரோனா கட்டுப்பாட்டுக் குழுவின் சிறப்புக் கூட்டத்தில் தெரிவித்தார்.

மாத்தளை மேயரின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இந்த முடிவை எடுத்தார்.

இதேவேளை, 1,000 படுக்கைகள் கொண்ட பல கொரோனா சிகிச்சை மையங்கள் நிறுவப்படும் என்றும், அதை ஏற்கனவே சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியுடன் கலந்துரையாடியதாகவும் கூறினார். 

 🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.