இலங்கையை நோக்கி படையெடுக்க முயற்சிக்கும் இந்தியர்கள்?
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள பின்னணியில், இலங்கையை சூழவுள்ள கடற்பரப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.
அதன்படி ,இந்தியாவில் கொவிட் தொற்று அதிகரித்துள்ளமையினால், கடல் மார்க்கமாக இலங்கைக்கு, இந்தியர்கள் தப்பிக்க முயற்சிப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்தே, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.
சென்னையிலிருந்து தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் கடல்மார்க்கமாக வருகைத்தந்து, புத்தளம் பகுதியில் தலைமறைவான நிலையில், நேற்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தனர்.
இதையடுத்து, இலங்கைக்குள் இந்திய பிரஜைகள் வருகைத் தருவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ள நிலையிலேயே, கடற்படையினர் இவ்வாறு தெரிவித்தனர்
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments