நாட்டை மூட தயாராகுங்கள்; பசில் ராஜபக்ஷ
நாட்டின் கொரோனா நிலைமை காரணமாக நாட்டை முழுமையாக அல்லது 75% மூடுவதற்கு தயாராக இருக்குமாறு பசில் ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் அலரி மாளிகையில் அத்தியாவசிய சேவை வழங்கும் துறைகளின் தலைவர்களுடனான கலந்துரையாடலின் போது, அதிகாரிகளிடம், அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்காலத்தில் நாட்டில் ஊரடங்கு உத்தரவு இருக்காது என்றும் பயணக் கட்டுப்பாடுகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற சூழ்நிலையில் அத்தியாவசிய சேவைகளை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து பசில் ராஜபக்ஷ மற்றும் அந்த நிறுவனங்களின் தலைவர்கள் நீண்ட விவாதங்களை இதன்போது நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments