அடுத்தது என்ன?: 13 - க்கு முன் தெரியும்
கொரோனா தொற்றின் வேகம், அதிகரித்துக் கொண்டே செல்வதால், அடுத்த கட்டமாக எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது தொடர்பில், அரசாங்கம் விரிவாக ஆராய்ந்துவருகின்றது. அதுதொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு, எதிர்வரும் 13ஆம் திகதிக்கு முன்னர் விடுக்கப்படக்கூடுமெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில், பல்வேறான மட்டங்களில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனோர் அங்கமாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று முன்தினம் (09) இரவு முக்கிய சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.
இதற்கிடையில், நாட்டை முழுமையாக முடக்குமாறு சுகாதாரத் துறைகளைச் சார்ந்தோர், அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றனர். எனினும், பொது முடக்கத்துக்குச் செல்வதற்கு முன்னர், பொதுமக்கள் தொடர்பில் சிந்திக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத்தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும், நாட்டை முழுமையாக முடக்குவதா? இல்லையா? என்பது தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், நேற்றிரவு கூடிய வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள், இச்செய்தி அச்சுக்கு போகும் வரையிலும் வெளியாகவில்லை.
இந்நிலையில், வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுமென செய்திகள் தெரிவித்தன
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments