Header Ads

அதிரடி நடவடிக்கை எடுத்தார் ரிஷாட்


 பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியூதீன் தலைமையிலான கட்சி, அதிரடியான நடவடிக்கையை எடுத்துள்ளது.

கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான அலி சப்ரி ரஹீம் மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகிய இருவரையும் கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

பாராளுமன்றத்தில்  கடந்த 20ஆம் திகதியன்று நடத்தப்பட்ட, கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் (போர்ட் சிட்டி) மீதான வாக்கெடுப்பின் போது, இவ்விருவரும் ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அது தொடர்பில் தன்னிலை விளக்கத்தை கோரும் வகையிலேயே இவ்விருவரும் கட்சி உறுப்புரிமையிலிருந்து தற்காலிகமாக இடைநி
றுத்தப்பட்டுள்ளனர்

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇


No comments

Powered by Blogger.