நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்து
ஹோமாகம தலகல பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டு உபகரணங்கள் மற்றும் மின்சார உபகரணங்கள் விற்பனை நிலையமொன்றில் நேற்று (01) இரவு தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
தீப்பரவலினால் விற்பனை நிலையம் அமைந்துள்ள இரண்டு மாடிக் கட்டிடம் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது. ஹொரணை நகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயினை கட்டுப்படுத்த கடுமையான முயற்சிகளை மேற்கொண்ட போதும் அது பயனளிக்கவில்லை.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரிய வராத நிலையில், மொரகஹஹேன பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, மொரகஹஹேன, கிரிவத்துடுவ பிரதேசத்தில் அமைந்து இரண்டு மாடி கட்டிடமொன்றில் தீடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸார், ஹொரணை மற்றும் களுத்துறை தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீப்பரவலில் உயிர் ஆபத்துக்கள் எதுவும் பதிவாகாத நிலையில் பொருட் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ரக்குவானை நகரில் அமைந்துள்ள கடைத் தொகுதியொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, 4 விற்பனை நிலையங்களுக்கு தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தீப்பரவலிலும் உயிர் சேதங்கள் பதிவாகாத நிலையில், பொருட் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments