Header Ads

மகத்தான வெற்றி: மு.க. ஸ்டாலினுக்கு தலைவர்கள் வாழ்த்து!

 

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன. பல தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடித்துள்ள கட்சிகளுக்கும் திமுகவுக்கு இடையேயான வாக்கு வித்தியாசம் அதிகம் உள்ளதால்  தங்களது வெற்றி உறுதியாகிவிட்டதாக கூறி தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

தமிழக தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத போதிலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி முதலமைச்சரும்  ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,  தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் மகத்தான வெற்றியை பதிவு செய்தற்காக மு.க.ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.  தமிழக மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும்  சிறந்த முறையில் அவர் ஆட்சி செய்ய வேண்டும் என்றும் வாழ்த்து கூறியுள்ளார்.

இதேபோல், கேரள சட்டப்பேரவை தேர்தலில் முன்னணியில் உள்ள மார்க்சிஸ் ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வர் பிரனராயி விஜயன், மேற்கு வங்கத்தில் முன்னணீயில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி ஆகியோருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதேபோல், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு  தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தகுதியான வெற்றி என்றும் நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு சிறப்பாக சேவையாற்ற தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் ட்விட்டரில்  பதிவிட்டுள்ளார்.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.