Header Ads

மட்டக்களப்பில் ஒட்சிசனின் தேவை அதிகரிப்பு


கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் அதிகரிப்பால், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஓட்சிசன் தேவை அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்டச் செயலானர் கே.கருணாகரன் தெரிவித்தார்.

எனவே, சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறும் அவர் கேட்டுள்ளார்.   

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில்,

“மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வழக்கமாக நாளை ஒன்றுக்கு 4 தொடக்கம் 5 ஒட்சிசன் சிலிண்டர்களே தேவைப்படுவது வழக்கம். ஆனால் தற்போது அங்கு கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதன் காரணமாக ஒரு நாளைக்கு 15 ஒட்சிசன் சிலிண்டர்கள் தேவைப்படுகின்றன.

“இதுவரை காலமும் ஒட்சிசனைப் பற்றி நாம் சிந்திக்கவில்லை. எனினும், மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தற்போது மிகவும் அவதானமாக இருக்கவேண்டும்.

“அதேவேளை, பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் சுகாதார அதிகாரிகள் ஏற்படுத்துகின்ற கட்டுப்பாடுகளைக் கண்டிப்பாக கடைப்பிடித்தால்தான் இந்த கொரோனா தொற்றைத் தடுக்க முடியும்.

“அநாவசியமாக ஒன்றுகூட வேண்டாம் எனவும் நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், சிறுவர்கள் மற்றும் வயோதிபர்கள் வீட்டை விட்டுவெளியேறி, பொது இடங்களுக்கு செல்லவேண்டாமென கேட்டுக்கொள்கின்றோம்.

“மூன்றாம் கட்ட கொரோனா இளம் சந்ததியினரை தாக்குவது அதிகம். எனவே பொதுமக்கள் அவதானமாக செயற்படவும் இல்லாவிடில், வேறு மாவட்டங்களில் எதிர்நோக்கும் பிரச்சினையை மட்டக்களப்பும் எதிர்நோக்க வேண்டிவரும்” என்றார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.