Header Ads

போரில் மரணித்த பொதுமக்களையும் நினைவுகூருங்கள்


யுத்தம் நிறைவடைந்து 12 வருடங்கள் கடந்துள்ளதை முன்னிட்டு சபையில் விசேட உரையாற்றிய பிரதமரின் உரைக்குப் பின்னர் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி உரையாற்றுவதற்கு, சுமந்திரனுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவால் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

யுத்த வெற்றி தொடர்பில் பிரதமரின் விசேட உரைக்குப் பின்னர் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, 12 வருடங்களுக்குப் பின்னர் இந்த நாளை பிரதமர் நினைவுப்படுத்தியமை மகிழ்ச்சியளிக்கிறது எனினும், இந்நாளில் உயிரிழந்த சிவில் மக்களையும் பிரதமர் நினைவுகூற வேண்டுமெனக் கோரினார்.

யுத்தத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களையும் தாம் நினைவுகூர்வதாகக் கூறி தொடர்ந்து உரையாற்றுவதற்கு சுமந்திரன் முயற்சித்த போது,  சுமந்திரனின் ஒலிவாங்கி திடீரென முடக்கப்பட்டது.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.