இலங்கையில் பகிரங்கமான இனவழிப்பே இடம்பெற்றது
இலங்கையில் இடம்பெற்றது பகிரங்கமான இனவழிப்பே எனத் தெரிவித்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், இனவழிப்புக்காக எந்தவொரு சிங்களத் தலைவரும் இதுவரையில் மன்னிப்புக் கோரவில்லை என்றார்.
யுத்தம் நிறைவடைந்து 12 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அதனை நினைவுகூரும் வகையில், சிறிதரன் எம்.பி, கறுப்பு ஆடையணிந்து சபை அமர்வுகளில் கலந்துக்கொண்டிருந்தார்.
தொடரந்து அங்கு உரையாற்றிய அவர், யுத்த வெற்றி தொடர்பில் விசேட உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, யுத்தத்துக்குப் பின்னர் சமாதானத்தை ஏற்படுத்த என்ன செய்திருக்கிறார்கள் என்பதை கூறவில்லை எனவும் யுத்தம் நிறைவடைந்து 12 வருடங்களுக்குப் பின்னரும், வடக்கு, கிழக்கில் இனப்படுகொலைகள் இடம்பெற்று வருகின்றன என்றும் எடுத்துரைத்தார்.
“உயிரிழந்த தமிழர்களை நினைவுகூர்வதற்கு, தமிழர்களுக்குத் தடை விதிக்கப்படுகின்றது. நினைவுத் தூபிகள் இடித்தழிக்கப்படுகின்றன. ஐக்கிய தேசிய கட்சியும் இனவழிப்புகளை நாட்டில் செய்திருக்கின்றது. கொழும்பு, மலையகம் என எல்லாப் பகுதிகளிலும் உள்ள தமிழர்கள், முழுமையாக இனவழிப்புச் செய்யப்பட்டுள்ளனர்.
“தற்போதைய ஜனாதிபதி பாதுகாப்புச் செயலாளராக இருந்தக் காலத்தில், 2006ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு மே மாதம் வரையில், பல தமிழர்கள் கொலை செய்யப்பட்டனர். பாராளுமன்றில்கூட எங்களதுப் பிரச்சினைகளைக் கூற முடியாத நிலையே காணப்படுகிறது. இலங்கையில் இடம்பெற்றது பகிரங்கமான இனவழிப்பே ஆகும். இது பொய் என்றால், சர்வதேசப் போர்க்குற்ற விசாரணைக்குத் தயக்கம் காட்டுவது ஏன்?” என அவர் கேள்வி எழுப்பினார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments