மட்டக்களப்பில் ஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை இன்று முதல் தனிமைப்படுத்தி முடக்குவதற்கும் மட்டு மாநகரசபை எல்லைக்குள் இருக்கும் அத்தியாவசிய வர்தக நிலையங்களைத் தவிர ஏனைய அனைத்து கடைகளை பூட்டுவதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியின் விசேட கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றபோதே மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதன்படி மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலமீன்மடு, நொச்சிமுனை, கல்லடி வேலூர், சின்ன ஊறணி, திருச்செந்தூர் ஆகிய ஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தி முடக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டு தேசிய கொரோனா செயலணிக்கு பருந்துரைக்கப்பட்டு அந்த கிராமசேவகர் பிரிவுகள் இன்றில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
அதேவேளை இன்றிலிருந்து மட்டக்களப்பு நகர் உட்பட மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் அத்தியாவசிய தேவையாக கருதப்படும் வர்த்தக நிலையங்களைத்தவிர ஏனைய வர்தகநிலையங்கள் மறு அறிவித்தல்வரை பூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட கொவிட் செயலணியின் இராணுவத்தரப்பு பிரதானி 231 வது படைப்பிரிவின் பிறிகேட் கொமாண்டர் வீ.எம்.என்.எட்டியாராச்சி,மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர்.குமாரசிறி, மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி கே.கிரிசுதன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments