இலங்கைக்குள் அதிரடியாக நுளையும் இந்திய றோ?
இந்தியாவின் “றோ” புலனாய்வு சேவை தமது புலனாய்வாளர்களுக்கு இலங்கை சம்பந்தமாக அறிவிப்பொன்றை வழங்கியுள்ளதாக இலங்கையின் புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளதாக தெரியவருகிறது.
கொழும்பு துறைமுக நகரம் தொடர்பாக உன்னிப்பாக அவதானிப்புகளுடன் இருக்குமாறு “றோ” புலனாய்வு சேவை இலங்கையில் உள்ள தமது புலனாய்வாளர்களுக்கு அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கு சீனாவுக்கு இடையில் நீருபூத்த நெருப்பாக இருந்து இருந்து வரும் நெருக்கடியே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
துறைமுக நகரில் முதலீடுகளை செய்யும் நோக்கில் சீன இராணுவ அதிகாரிகள் வர வாய்ப்புள்ளதாகவும் சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள் அல்லது தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட கப்பல்கள் எரிபொருள் நிரப்பும் நோக்கில் கொழும்பு துறைமுக நகருக்கு வரலாம் எனவும் இந்தியா சந்தேகிக்கின்றது.
அத்துடன் இலங்கை பொலிஸாருக்கு தொடர்பு சாதன வலையமைப்பை வழங்க சீனா எடுத்துள்ள தீர்மானம் குறித்து “றோ” புலனாய்வு சேவை கூடிய கவனத்தை செலுத்தியுள்ளது.
கொழும்பு துறைமுகத்திற்கு வந்து எரிபொருளை நிரப்புவதற்கான அனுமதிகளை சீன கப்பல்களுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கொழும்பு துறைமுக நகரம் இந்தியாவுக்கு 300 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இவ்வாறான பின்னணியில் போர்சூழ்நிலைகள் எற்பட்டால், இலங்கை சீனாவின் தளமாக மாற வாய்ப்பு இருக்கலாம் என இந்திய ஊடகங்கள் இதற்கு முன்னர் கூறியிருந்தன.
அத்துடன் இரண்டு உலக வல்லரசுகளின் போரில் சிக்குவது இலங்கை போன்ற நாட்டின் அழிவுக்கு காரணமாக அமையும் என இலங்கையில் உள்ள நிபுணர்கள் கூறியுள்ளனர் என்பது சுட்டிக்காட்த்தக்கது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments