Header Ads

கொரோனா செயலணியை கலையுங்கள்- ராஜபக்ஷக்களுக்கு ஆலோசனை!


 இலங்கையில் தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளைக் கேள்விக்குட்படுத்தியுள்ள மக்கள் சட்டத்தரணிகள் சங்கம், வெளிப்படைத்தன்மையைக் பாதுகாக்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட ராஜபக்ச சகோதரர்களுக்கு முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளது.

சுகாதார நிபுணர்களின் தீர்மானங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு பொறிமுறை, தற்போதைய கொரோனா தொற்று குறித்த ஜனாதிபதி செயலணியில் காணப்படவில்லை என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

தொற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கு இலங்கை அரசு பெற்ற நிதி, அது செலவு செய்யப்பட்ட விதம் மற்றும் கணக்காய்வு செய்யப்பட்டதா? உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் சமல் ராஜபக்ச ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில், மக்கள் சட்டத்தரணிகள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

தொற்றுநோய் வேகமாக பரவி வருவதால், அதைக் கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி மற்றும் நன்கொடைகள் பெறப்பட்டு வருவதால், இதுபோன்ற திறமையான மற்றும் வெளிப்படையான பொறிமுறையானது இந்த நேரத்தில் அவசியம் என அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

2005ஆம் ஆண்டு இலங்கை அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தின் 13ஆம் பிரிவில் உள்ள விதிகள் இத்தகைய தொற்றுநோயை எவ்வாறு கையாள்வது என்பதை தெளிவாக விளக்குவதாக குறித்த சங்கம் ராஜபக்ச சகோதரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சட்டத்தால் நிறுவப்படவுள்ள அனர்த்த முகாமைத்துவ தேசிய சபையில், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட பிரதிநிதிகள் சபை எடுக்கும் தீர்மானங்கள் அனைத்து இலங்கையர்களின் நம்பிக்கையையும் வெல்லும் வகையில் அமைய வேண்டுமென சட்டத்தரணிகள் கூறுகின்றனர். 

கொரோனாவை தடுப்பதற்கு, தற்போது அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிக்கு பதிலாக, 2005ஆம் ஆண்டின், இலங்கை அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் 13ஆம் இலக்க விதிகளுக்கு அமைய, அனர்த்த முகாமைத்துவ தேசிய சபை நிறுவப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும், அந்தச் சட்டத்தின் பிற விதிகளைப் பயன்படுத்தி கொரோனா தொற்றை ஒழிக்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.