Header Ads

கரும் பூஞ்சை நோய் இலங்கைக்கு புதிதல்ல! வைத்தியர் வெளியிட்டுள்ள தகவல்


இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ள சிலருக்கு கரும் பூஞ்சை நோய் ஏற்பட்டுள்ளமை தற்போது சமூகத்தில் பெருமளவில் பேசப்படும் விடயமாக மாறியுள்ளதாக விஷேட வைத்தியர் பிரிமாலி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

அம்பாறையில் ஒருவருக்கு கரும் பூஞ்சை நோய் இருப்பதாக இனங்காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து சமூகத்தில் இது தொடர்பான அச்சம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இலங்கை வைத்திய பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் 2019ஆம் ஆண்டு முதல் இலங்கையில் கரும் பூஞ்சை நோயாளர்கள் இனங்காணப்பட்டு வருவகின்றனர்.

அதனடிப்படையில் 2019ஆம் ஆண்டு 42 பேருக்கும், 2020ஆம் ஆண்டு 24 பேருக்கும் மற்றும் 2021 ஆம் ஆண்டிள் இதுவரையில் 24 பேருக்கும் கரும் பூஞ்சை நோய் இருப்பது இனங்காணப்பட்டுள்ளனர்.

இருப்பினும் இவர்களில் எவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை எனவும் இந்த கரும் பூஞ்சை நோய் இலங்கைக்கு புதிதல்ல.

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு இந்த ​நோய் வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.