Header Ads

“முள்ளிவாய்க்கால் ஒரு தோல்வியின் புள்ளியல்ல” வெளியிடப்பட்டது பிரகடனம்


முள்ளிவாய்க்கால் ஒரு தோல்வியின் புள்ளியல்ல, சிங்கள – பௌத்த அரசு முள்ளிவாய்க்காலை, தமிழர் விடுதலைப் போராட்டத்தை ஒரு தோல்வியின் முடிவாகவே கட்டமைக்க முயல்கின்றது. முள்ளிவாய்க்கால் சிங்கள – பௌத்த அடக்குமுறைக்கெதிராக தொடர்ந்தும் எழ வேண்டிய வரலாற்று கடமையை, பட்டறிவினூடு உணர்த்திய வரலாற்றுத் திருப்புமுனை.

இவ்வாறு வெளியிடப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் பொதுக்கட்டமைப்பால் பிரத்தியேக இடம் ஒன்றில் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் முள்ளிவாய்க்கால் பிரகடனம் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் பிரகடனத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

முள்ளிவாய்க்கால் எம் இனத்தின் இதயம். ஒவ்வொரு வருடமும் சிங்கள பௌத்த அரசு தனது அரச இயந்திரத்தை பயன்படுத்தி நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுத்து வருவதோடல்லாமல் நினைவேந்தலை நிறுவனமயப்படுத்தவிடக்கூடாது என்பதில் திண்ணமாய்இருக்கின்றது.

அதனால் தான் நினைவுத்திடலை பெயரிட எடுத்த முயற்சிகளை தனது இராணுவக்கரம் கொண்டு நசுக்கியிருக்கின்றது. அதைவிடவும் நாங்கள் இறந்தவர்களை நினைந்து சுடரேற்றும் புனித இடத்தை மாசுபடுத்தி அழித்திருக்கின்றது. இவ்வாறான இராணுவ செயற்பாடுகள் எமதினத்தின் அடக்குமுறைக்கெதிரான விடுதலை வேட்கையை திடப்படுத்துமே தவிர நலிவடையச் செய்யப்போவதில்லை.

முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழர்களை ‘ஈழத்தமிழ்த்தன்மையில்’ ஒருங்கிணைக்கும் தேசிய விடுதலை மையப்புள்ளி. ஈழத்தமிழர்களுக்கென்று நினைவுகூரல் பண்பாட்டுப் பாரம்பரியம் உண்டு. எங்களோடு வாழ்ந்து இறந்து போனவர்களை இன்னமும் வீடுகளிலும், பொது இடங்களிலும் அவர்களின் படங்களுக்கு மாலையிட்டு, விளக்கேற்றி அவர்களுடைய சுவாச இருப்பை தக்க வைத்துக் கொள்ளுகின்றோம்.

அவர்கள் இறந்த காலத்திற்குரியவர்களாக இல்லாமல் எம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்களாக கருதும் நம்பிக்கையில் தான் ஈழத்தமிழர்களது நினைவுகூரல் கட்டமைக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய கனவுகள் எப்போதும் எம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றது. அந்தக் கனவுகளைச் சுமந்து தான் அடுத்த தலைமுறை உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட எமது இரத்தச் சொந்தங்கள் ஒவ்வொருவரும் எம்மினத்தின் மூச்சாக வாழ்ந்தவர்கள் சிங்கள – பௌத்த அடக்குமுறைக்கெதிராக ஈழத்தமிழினம் என்றோ ஒரு நாள் சுதந்திரத்துடன் வாழும் என்ற கனவுடன் மூச்சடங்கிப் போனவர்கள்.

அடக்குமுறைக்கெதிரான போராட்டங்கள் ஒரு போதும் தோற்றதான வரலாற்று உண்மை பதியப்பட்டதற்குரிய ஆதாரம் இல்லை. விடுதலைப் போராட்ட அணுகுமுறைகள் பின்னடைவுகளைச் சந்தித்திருக்கின்றன. விடுதலைப் போராட்டத்தை வெற்றி, தோல்வி என்ற இருமை முறையியலுக்குள் வைத்து ஆராய முற்படுவது வரலாற்று அபத்தம். அதைத்தான் சிங்கள – பௌத்த அரசு செய்ய முற்படுகின்றது.

சிங்கள – பௌத்த அரசு முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையை ஒரு போதும் ஏற்று அங்கீகரிக்கப் போவதில்லை.

துருக்கிய அரசு ஆர்மேனியப் படுகொலையை 106 ஆண்டுகளாகியும் ஏற்றுக் கொள்ளவில்லை, தொடர்ந்தும் ஆர்மேனியர்களின் இனப்படுகொலைக் கோரிக்கையை மறுத்து, நிராகரித்து வந்துள்ளது. தமிழ் இனப்படுகொலையை மறுத்து, நிராகரித்து வருகின்ற சிங்கள – பௌத்த அரசு வரலாற்றில் ஒரு போதும் நினைவு கூரலுக்கான நினைவுத் திறவெளியை ஈழத் தமிழர்களுக்கு கட்டமைக்கப் போவதில்லை.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வரலாற்றியல் சொல்லாடல் சிங்கள – பௌத்த அரசு ஊக்குவிக்கின்ற வெற்றிச் சொல்லாடல்களுக்கு எதிர்வினையாய் உள்ளது. ஈழத் தமிழர்கள் தடைகளுக்கு மத்தியில் தான் நினைவுகூரலை ஒழுங்கமைக்க வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்திற்குள் வலிந்து தள்ளப்பட்டுள்ளனர். நினைவு கூருதலை அடக்குமுறைக்கெதிரான ஆயுதமாக மாற்ற வேண்டிய சூழலை சிங்கள - பௌத்த அரசு ஈழத் தமிழர்கள் மேல் திணித்து வருகின்றது.

முள்ளிவாய்க்கால் வரலாற்றுத்தளத்தை ஒற்றையாட்சி மையத்தை வலுப்படுத்தி, தமிழ்த் தேசிய நீக்க அரசியலை சிங்கள – பௌத்த அரசு முன்னெடுத்து வருவதை அறியாதோர் இலர்.

வடக்கு – கிழக்கில் இராணுவ மயமாக்கலை செறிவுபடுத்தி, பயங்கரவாதம் என்ற போர்வையில் வடக்கு – கிழக்கில், மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கி அச்ச மனநிலைக்கூடாக மக்களை ஆள, கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முயற்சிக்கின்றது. அதையே மக்கள் கிளர்ச்சிக்கு எதிரான உத்தியாகவும், ஆயுதமாகவும் பயன்படுத்துகின்றது.

முள்ளிவாய்க்கால் வரலாற்றில் இரத்தமற்ற, ஆயுதமற்ற போரை சிங்கள – பௌத்த அரசு வடக்கு – கிழக்கில் கட்டவிழ்த்து விட்டுள்ளது. அப்போரின் பரிமாணங்கள், நில அபகரிப்பாகவும், சிங்கள – பௌத்த காலணித்துவமயமாக்காலாகவும், ஈழத்தமிழ் குடிசனப் பரம்பலை மாற்றியமைத்து பிரதிநிதித்துவத்தை சிக்கலுக்குட்படுத்துவதாகவும், சிறிலங்காவின் பெரும்பான்மை ஒற்றைப் பண்பாட்டை அங்கீகரிப்பதாகவும், சிங்கள – பௌத்த ஏகாதிபத்தியத்தை தக்க வைத்துக் கொண்டு மாகவம்ச – வாக்களிக்கப்பட்ட தேசத்தை அடையும் இலக்கை கொண்டதாகவும் அமைந்திருக்கின்றன.

வடக்கு – கிழக்கில் தமிழர் நிலம் தொடர்ந்தும் சூறையாடப்படுகின்றது. வன இலாகா, தொல்லியல் திணைக்களம், வனபரிபாலன சபை, மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, என சிங்கள – பௌத்த அரச இயந்திரத்தின் பல்வேறு திணைக்களங்கள் நில அபகரிப்புச் செயற்திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சிங்கள– பௌத்த தொல்லியல் எச்சங்களை மட்டுமே கண்டெடுக்கின்ற தொல்லியல் திணைக்களம் சிறிலங்காவின் வரலாற்றியலை சிங்கள – பௌத்தத்திற்கு மட்டுமானதாக கட்டமைக்க முயலுகின்றது. கிழக்கில் அபகரிக்கப்படும் தமிழர் நிலங்களில் சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்டு குடிசனப் பரம்பலை மாற்றியமைப்பதில் சிங்கள – பௌத்த அரசு கங்கணம் கட்டி வருகின்றது🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇




No comments

Powered by Blogger.