Header Ads

சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன

 

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கேகாலை, புத்தளம், கண்டி குருணாகல், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 13ஆம் திகதி முதல் இதுவரை 11 ஆயிரத்து 796 குடும்பங்களைச் சேர்ந்த 46 ஆயிரத்து 730 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்த நிலையம் தெரிவித்துள்ளது. அதேநேரம், சீரற்ற காலநிலை காரணமாக 4 மரணங்கள் பதிவாகியுள்ளன என்றும் ஆயிரத்து 247 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, 636 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்றும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. மழைக்காரணமாக கொழும்பு, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண் சரிவு அபாய எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளது

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.