முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டது ஏன் ? வெளிவந்த தகவல்
உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூரும் சின்னங்கள் கூட இருக்கக் கூடாது என்பதற்காகவே ராஜபக்ஸ அரசாங்கம் முள்ளிவாய்க்கால் நினைவுத்ததூபியை இடித்தழித்திருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இன்று ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட புளொட்டின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், உயிரிழந்த மக்களின் இலட்சியக் கனவை நிறைவேற்ற தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்துடன் நாடாளுமன்றில் கொண்டுவரப்படவுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிராகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சட்டமூலத்திற்கு செலவிடும் நிதியை கொரோனா தடுப்பு செயற்பாடுகளுக்கு வழங்குமாறே ஏனைய எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments