Header Ads

நுவரெலியா உட்பட 4 மாவட்டங்களில் 7 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்!


 

நாட்டில் உடன் அமுலுக்கு வரும வகையில் மேலும் சில பிரதேசங்கள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

7 கிராம சேவகர் பிரிவுகளும், ஒரு பொலிஸ் பிரிவுமே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பொலிஸ் அதிகாரப் பிரிவும், திருகோணமலை மாவட்டத்தின் ஓர்ஸ் ஹில் , அன்புவழிபுரம் ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

பாணந்துறை தெற்கு பிரதேசத்தின் வடக்கு வேகட, கிரிபேரிய மற்றும் கிழக்கு பாலமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தின் – வலப்பன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலந்தஹின்ன கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.