Header Ads

அமைச்சர் மஹிந்தானந்த தனிமைப்படுத்தப்பட்டார்

 

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, அமைச்சர்  தனது   பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 தனது பாதுகாப்பு பிரிவின் அதிகாரியொருவர்  கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை வெள்ளிக்கிழமை மாலை 2 மணியளவில் தெரியவந்ததாகவும் இதனையடுத்து,தான் உள்ளிட்ட தமது குடும்ப உறுப்பினர்கள் அ​னைவரும் சுயதனிமையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து  தன்னுடைய சாரதிகள் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தனக்கும் குடும்பத்தினருக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.