Header Ads

இலங்கையில் ஒரே நாளில் 2573 பேருக்கு கொரோனா: 26 பேர் உயிரிழப்பு! அச்சத்தில் மக்கள்

 

இலங்கையில் நேற்று மட்டும் 2,573 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று 26 கொரோனா மரணங்கள் அறிவிக்கப்பட்டன. மரணங்களின் எண்ணிக்கை 827 ஆக உயர்ந்துள்ளது.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 128,479 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,148 பேர் நேற்று (10) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 105,611 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், நேற்று 17,000 இற்கும் அதிகமானவர்கள் சீனாவின் சினோஃபார்ம் தடுப்பூசியை பெற்றுள்ளனர். 

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.