Header Ads

கோட்டாபய - மஹிந்த அரசாங்கத்திற்கு 24 மணிநேர காலக்கெடு! ஆனந்த தேரர்


நாட்டில் தீவிரமாக பரவிவரும் கொரோனா தொற்றை கட்டுபாடுத்த இரு வாரங்களுக்கு நாட்டை முழுமையாக முடக்கும்படி அரசாங்கத்திடம் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்னும் 24 மணிநேரத்தில் அரசாங்கம் தீர்மானமொன்றை எடுக்காது விட்டால் இலங்கையும் எதிர்காலத்தில் இந்தியாவைப் போன்று மாறிவிடும் என எச்சரித்தார்.

கொழும்பு - நாரஹேன்பிட்டி அபயராமய விகாரையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,

குறைந்த பட்சம் 02 வாரங்களுக்காவது நாட்டை முடக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம்.

இதுவரை நாங்கள் இப்படியான கோரிக்கையை விடுத்திருக்கவில்லை. ஆனாலும் தற்சமயம் நாட்டின் பயணமானது ஆபத்தை நோக்கிச் செல்கின்றது.

கொழும்பு மாத்திரமல்ல, பருத்தித்துறை முதல் மாத்தறை வரையிலான எல்லாப் பகுதிகளிலும் இன்று கொரோனா தொற்று பரவிவிட்டது. விரைந்து நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தானாகவே இந்த நாடு ஸ்தம்பித்துவிடும்.

இன்று அரச மருத்துவமனைகளில் தாதியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன் 200ற்கும் மேற்பட்ட தாதியர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

வைத்தியசாலைகளில் சிகிச்சையளிக்க மருத்துவர்கள் மற்றும் தாதியர்களுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றது. இதனிடையே இராணுவம் உட்பட அரசாங்கம் 10000 நோயாளர் கட்டில்களை அமைக்கின்றது. அதனை ஒருபக்கம் வரவேற்றாலும் இன்று பயிற்சிபெற்ற தாதியர்களின் தட்டுப்பாடு இருப்பதால் புதிய சிகிச்சைப் பிரிவுகள் இருந்தும் பணியாட்கள் இல்லாத நிலைமை காணப்படுகின்றது.

எனவே ஓய்வுபெற்ற தாதியர்களையாவது மீண்டும் குறுகிய நாட்களுக்கு சேவையில் அமர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமெரிக்கப் பல்கலைக்கழகமொன்றில் நடத்தப்பட்ட ஆய்வில், இந்த நிலைமை தொடர்ந்தால் இலங்கையில் தினமும் 20 ஆயிரம் கொரோனா நோயாளர்கள் இனங்காணப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அந்த நிலைமைக்கு நாட்டை இட்டுச்செல்லாமல் அரசாங்கம் விரைந்து இன்னும் 24 மணிநேரத்தில் தீர்மானமொன்றை அறிவிக்க வேண்டும் என்றார்

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.