Header Ads

முறிகண்டி பகுதியில் பாரிய விபத்து..ஒருவர் படுகாயம்


முறிகண்டி பகுதியில் திங்கட்கிழமை இடம்பெற்ற பாரிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

பகுதியில் அமைந்துள்ள இராணுவ சோதனைச்சாவடியில் தரித்து நின்ற வாகனத்துடன் கார் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதேவேளை நான்கு வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறித்த பகுதயில் சோதனைச்சாவடியில் தரித்து நின்ற வாகனங்களை அவதானிக்காது நோக்கி பயணித்த கார் தரித்து நின்ற வானுடன் மோதியுள்ளது. பத்துக்குள்ளான வான் முன்னால் தரித்த நின்ற மோட்டார் சைக்கிளுடன் சென்று எதிரே நின்ற ரிப்பர் வாகனத்துடன் மோதியுள்ளது.

இதன் போது மோட்டார் சைக்கிளல் தரித்திருந்த ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்த வருகின்றனர்.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.