N - JOY தேங்காய் எண்ணெயிலும் புற்றுநோய் பதார்த்தம் கண்டுபிடிப்பு...!
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் N-JOY என்ற தேங்காய் எண்ணெயிணை பயன்படுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
N- JOY தேங்காய் எண்ணெயின் மாதிரிகள் மற்றும் நிறுவனத்திலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் மற்றும் விற்பனைக்கு தயாரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் போத்தல்களின் மாதிரிகள் ஆகியவை என அனைத்தும் இலங்கை பெரதெனியா பல்கலைக்கழகத்தின் ஆய்வுகூடத்தில் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
இந்த சோதனையில் புற்றுநோயான எப்லடொக்ஸின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக N-JOY நிறுவனத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நுகர்வோர் விவகார ஆணையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்தா திசாநாயக்க தெரிவிக்கையில்இஇது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
No comments