அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டுக்கு மக்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்- ரணில்
அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டுகளுக்கு மக்கள் அனைவரும் கட்சி பேதமின்றி குரல் கொடுக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நுகேகொடையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டள்ளார்.
குறித்த நிகழ்வில் ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியுள்ளதாவது, சிங்கராஜா வனத்தில் நீர்தேக்கம் ஒன்றினை அமைத்து அதனூடாக அம்பாந்தோட்டை பகுதிக்கு நீர் வழங்குவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
குறித்த செயற்பாடு வனப்பாதுகாப்பு சட்டத்திற்கு முரணானது என்பதுடன் சிங்கராஜா வனத்திலுள்ள ஒரு மரத்தேனும் வெட்டுவது கூட சட்டவிரோத செயற்பாடாகவே சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த வனம், நாட்டின் பிரதான மழைக்காடாக இருக்கின்றது. இந்நிலையில் இப்பகுதியில் நிலப்பகுதிகளும் சட்டவிரோதமான முறையில் ஆக்கிரமிக்கப்படுகின்றன.
குறித்த சட்டவிரோத செயற்பாட்டினை, அரசாங்கம் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். அத்துடன் இந்த வனத்தை பாதுகாப்பதற்கு அனைத்து மக்களும் கட்சி பேதமின்றி ஒன்றிணைய வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்
No comments