Header Ads

ஈஸ்டர் தாக்குதல் – பரிசீலனை குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு



ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பரிசீலனை செய்த குழுவின் அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று (திங்கட்கிழமை) கையளிக்கப்படவுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த மாதம் 15ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவிருந்தது.

எனினும் மேலதிக பரிசீலனைக்காக குறித்த குழு இரண்டு வார கால அவகாசத்தினை பெற்றது.

அதன்படி,  அமைச்சரவை கூடுவதற்கு முன்னர் இன்று குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என குறித்த குழுவின் உறுப்பினரும் சுற்றுலாத்துறை அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.