இலங்கை அரசாங்கத்தின் தடைக்கு எதிராக போராட தயாராகும் பிரித்தானிய தமிழ் அமைப்புகள்!
நூற்றுக்கணக்கான தமிழர்கள் மற்றும் பல புலம்பெயர் அமைப்புகளுக்கு இலங்கை அரசாங்கம் விதித்துள்ள தடைக்கு எதிராக போராட பிரித்தானிய தமிழ் அமைப்புகள் தயாராகிவருகின்றன.
அதன்படி இலங்கை அரசாங்கத்தின் குறித்த நடவடிக்கை காரணமாக நீதி மற்றும் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தைத் தொடர பிரித்தானிய தமிழ் இளைஞர்கள் அமைப்பு உறுதி அளித்துள்ளன.
தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளை தொடர்ந்தும் வலியுறுத்த விழிப்புணர்வை மேற்கொள்ளவுள்ளதாக பிரித்தானிய தமிழ் இளைஞர்கள் அமைப்பு அறிவித்துள்ளது.
மேலும் தமிழ் இளைஞர் அமைப்பு இலங்கை அரசால் தொடர்ந்து தடைசெய்யப்படுவது எங்களுக்கு ஆச்சரியமான ஒன்றாக கருதவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையில் வசிக்கும் 35 பேர் உட்பட பயங்கரவாத சட்டத்தின் கீழ் 300 க்கும் மேற்பட்டவர்களுக்கும் உலகெங்கிலும் உள்ள பல புலம்பெயர் அமைப்புக்களுக்கும் இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளது
No comments